God is Love Vs Love is God
கடவுளின் பொருள் என்னவென்று சுருங்க சொன்னால் Butterfly effect+Chaos Theory என்பது என் கருத்து ...விதி , அதிர்ஷ்டம் என்று ஏதும் இல்லை எல்லாம் Butterfly effect.... சிறு வயது முதல் என் மீது திணிக்க பட்ட கடவுள் நம்பிக்கையை விடமுடியவில்லை ....அனுபவ அறிவோ கடவுள் இல்லை என்று சொல்வதையும் ஏற்றுகொள்ளாமல் இருக்க முடியவில்லை... கடவுளின் பெயரால் ஏற்படும் கொடுமைகள் இவ்வுலகில் ஏராளம் ...ஆயிரம் ஆயிரம் அப்பாவி மக்கள் போரினால் இறக்கிறார்கள் ...இவர்களை எல்லாம் கடவுள் என்று ஒருவர் ஏன் காப்பாற்ற வில்லை(Eco System maintain pannuvatharku ithuva vali nu kekka thonuthu)....கடவுள் ஏன் சாதிகளை மதங்களை உருவாக்க வேண்டும்....ஏன் மக்களை மக்கள் கொல்ல தூண்ட வேண்டும்....கடவுளுக்கு இரக்க குணம் என்று உள்ளதா என்பது தெரியவில்லை கடவுளின் பெயரால் நடக்கும் மூட நம்பிக்கைகளை என்னவென்று சொல்லுவது கடவுள் தேங்காய் எலுமிச்சையில் விளக்கு இவை எல்லாமுமா எதிர் பார்கிறார். கடவுளை மனிதரில் காணுங்கள் ....சிலையில் இல்லை கடவுள்...மனதில் , அன்பில் தான் கடவுள் உள்ளார் என்பதை மட்டுமே என்னால் ஏற்று கொள்ள முடிகிறது